Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Nov 20, 2015

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறுதல் ஒத்திவைப்பு



பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் வாக்குமூலத் தைப் பெறும் நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக் காக நேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தி ருந்தது.

எது எவ்வாறு இருப்பினும் அத்தியாவசிய ஆவணங்கள் சில வற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் சாட்சி விசாரணை களை இன்று வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்

லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரத்னா லங்கா நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்ய எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஷங்க சேனாதிபதி இன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு அழைக்கப் பட்டுள்ளார்.