Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 9, 2018

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சகல வங்கிகளிலும் நிவாரணக் கடன்கள்



'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சகல வங்கிகளிலும் பெரும்பாலானோருக்கு வர்த்தக கைத்தொழில் சேவை மேம்பாட்டு நிவாரணக் கடன்கள் வழங்கப்பட்டு வருவதாக வங்கித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்ச்சியில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் கஸ்தூரி அனுராத நாயக்க கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். 

கடந்த மாதத்தில் ஆறாயிரம் தொழில் முயற்சியாளர்கள் சேவைகளை ஆரம்பித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கை வங்கியின் முகாமையாளர் செனரத் பண்டார உரையாற்றுகையில், ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவது திட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். 

அதன் உதவி முகாமையாளர் விக்ரம நாராயண உரையாற்றுகையில், தொழில் முயற்சியாளர்கள் தத்தமது இலக்குகள் குறித்து தெளிவாக இருந்தால், தமது வங்கி கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் எனக் தெரிவித்துள்ளார். 

பேராசிரியர் சங்கைக்குரிய விஜிதபுர விமலரத்ன தேரர் கருத்து வெளியிடுகையில், மக்கள் மற்றவர்களில் தங்கியிருக்கும் மனப்பான்மையிலிருந்து மீண்டௌ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி உரையாற்றுகையில் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏற்றுமதியை அதிகரிப்பது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.