Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 10, 2018

கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்கு வட மாகாண சபையில் அஞ்சலி


மறைந்த கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்கு வட மாகாண சபையில் உணர்வு பூர்வமான அஞ்சலி நேற்று (09) செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மறைந்த கலைஞர் மு. கருணாநிதி, குரல் கொடுத்து வந்தமை இங்கு நினைவு கூரப்பட்டது. 

தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்த 94 வயதான கலைஞர் மு. கருணாநிதி, சென்னை, காவேரி வைத்தியசாலையில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் திகதி மாலை 6.10 மணி அளவில் காலமானார். 

வடமாகாண சபையின் 129 ஆவது அமர்வு நேற்று காலை ஆரம்பமான வேளை, கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வட மாகாண சபை இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். 

இதனை அடுத்து அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தியதுடன், முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கான அஞ்சலி உரைகளை நிகழ்த்தப்பட்டன. 

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலைஞர் மு. கருணாநிதியின் மறைவுக்கு தமது அனுதாபங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.