Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 12, 2018

டன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிப்பு



நுவரெலியா பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டன்சினன் வீடமைப்புத் திட்டம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மலையக புதிய கிராமம் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுளளன.

இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்தி;ர மோதி தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வைபவத்தில் உரையாற்றவுள்ளார். 

அமைச்சர்களான பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக்க, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் தந்து உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளர். 

இந்தத் திட்டத்தின் கீழ் 404 வீடுகள்; அமைக்கப்பட்டுள்ளன. மலையக புதிய கிராமம் அடிப்படை வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஏழு பேர்ச் நிலப்பரப்பில் 550 சதுர அடியில் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான காணி உறுதியும் வழங்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் இந்த அமைச்சு நிர்மாணித்துள்ள வீடுகளின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் மேலானதாகும். இதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி கிடைத்துள்ளது.