Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 16, 2018

சுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு திருமணம்


சுப்பிரமணியபுரம் புகழ் ஸ்வாதி பைலட்டை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 17 வயதில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியானவர் ஸ்வாதி.

சுப்பிரமணியபுரம் படம் மூலம் கோலிவுட் வந்தார். முதல் படத்திலேயே அவர் மிகவும் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் அவரால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை.


ஸ்வாதி ஸ்வாதி மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாக இருக்கும் விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் வரும் 30 ஆம் திகதி ஸ்வாதிக்கும், விகாஸுக்கும் திருமணம் நடக்கப் போகிறதாம்.

திருமணத்திற்கு குடும்பத்தார், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் பிரமாண்ட வரவேற்பு நடக்க உள்ளதாம்.

இந்தோனேசியா விகாஸ் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தாவில் வசிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஸ்வாதி இந்தோனேசியாவில் செட்டில் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது. வரும் 30 ஆம் திகதி திருமணம் நடக்க உள்ளதை ஸ்வாதி உறுதி செய்துள்ளார்.