Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 16, 2018

இந்தியாவின் 71 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்திய பாடகி உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி



இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின வைபவத்தை முன்னிட்டு இந்திய பிரபல பாடகி உஷா உதுப்பின் இசைநிகழ்ச்சி கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு நேற்று மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இந்திய சுதந்திர கொண்டாட்ட நிகழ்வாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இசைத்துறையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தடம் பதித்துள்ள திருமதி உஷா உதுப் இந்தியாவின் உயர்விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். 

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரண்ஜித் சிங் சந்து, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.