Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 20, 2018

காதலரை கரம் பிடிக்கும் பிரியங்கா சோப்ரா: மும்பையில் நிச்சயதார்த்தம்


நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது.  பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா, ஹாலிவுட் படங்கள் சீரியல்கள் என படு பிசியானார்.

அப்போதுதான் தன்னைவிட 10 வயது குறைவான பாப் சிங்கரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸ் உடன் பிரியங்காவுக்கு காதல் மலர்ந்தது. 

இன்று நடைபெற்று வரும் நிச்சயதார்த்த விருந்துக்கு வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிச்சயதார்த்த விருந்தால் பிரியங்கா சோப்ராவின் வீடு களைகட்டியுள்ளது. மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்களுக்காக 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், கரன் ஜோகர், ரவீனா டன்டன், ஜபாரியா ஜோடி, மணீஷ் மல்ஹோத்ரா, பாடகர் சோஃபி சவுத்ரி ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் பிரியங்கா-நிக் நிச்சயதார்த்த பார்ட்டி நிகழ்ச்சியில் பங்ககேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்காவும் நிக்கும் ஜோடியாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.