Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Aug 20, 2018

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தின் தொலைத்தொடர்பாடல் முகாமைத்துவம் கற்கை பீட வகுப்பு பகிஷ்கரிப்புக்குத் தீர்வு



கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் தொலைத்தொடர்பாடல் மற்றும் முகாமைத்துவம் கற்கை பீடத்தின் மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக முன்னெடுத்த வகுப்புப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது;

பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கற்கும் மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்க இருப்பதாக வளாகத்தின் பொறுப்பாளர் கலாநிதி வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.