Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Sep 1, 2018

39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று திறப்பு



அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் 39ஆவது ஒசுசல கிளை பேரதனை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை திறக்கப்படவுள்ளது. 

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன இது தொடர்பான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 

இலக்கம் 1157, கெட்டம்பே, பேராதனை என்ற இடத்தில் இந்த ஒசுசல கிளை அமைக்கப்பட்டுள்ளது.

அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் இதுவரையில் 38 ஒசுசல விற்பனை கிளைகளை நடத்தி வருகின்றது. 103 முகவர் ஒசுசல கிளைகளும் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்டுள்ளது. தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் ஒசுசல கிளைகள் திறக்கப்படவுள்ளன.