Info Sri Lanka News | Tamil

இலங்கை தமிழ் செய்திகள் | Sri Lanka Tamil News Powered By Info Sri Lanka News

Sep 15, 2018

மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர்


பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர். இந்த சீரியலுக்கு பிறகு மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையில் நாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தியுடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவ்விரண்டு படங்களை தொடர்ந்து தற்போது ப்ரியா மீண்டும் முன்னணி நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஆம், இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும் மதுரையை சேர்ந்த டீச்சராகவும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளது.